தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு 2019 டிசம்பர் 11ஆம் தேதிமுதல் 23ஆம் தேதிவரை நடைபெற்றது. அப்போது, ஷேர்சேட், ஹலோ உள்ளிட்ட செயலிகளில்
- ஒன்பதாம் வகுப்பு தமிழ்,
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்,
- பதினோராம் வகுப்பு உயிரியல்,
- பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல்
ஆகிய நான்கு பாடங்களைச் சார்ந்த அரையாண்டு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளிவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை தரப்பிலிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது பள்ளிகளில் நடைபெறும் திருப்புதல் தேர்வின் வினாத்தாளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாளை வெளியிட்டது மட்டுமின்றி காணொலியில் ஒருவர், 'பல்வேறு வினாத்தாள்களுக்கு எங்கள் இணைய பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்' என சர்வசாதாரணமாகத் தெரிவிக்கின்றார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகும் கேள்வித்தாள் மேலும், வரும் மார்ச் மாதம் 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கவிருக்கும் சூழலில், பள்ளிக் கல்வித் துறை தரப்பிலிருந்து நடத்தப்படும் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக கல்வியியல் வல்லுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!