தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பு துணைத் தேர்வு நாளை தொடக்கம் - chennai latest news

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு நாளை (ஆக.6) தொடங்கி, ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

12ஆம் வகுப்பு
12ஆம் வகுப்பு

By

Published : Aug 5, 2021, 6:38 PM IST

சென்னை: கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட்டன.

மதிப்பெண் முடிவுகளில் திருப்தியற்ற மாணவர்கள், கடந்த ஜூலை 23 முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையிலான நாட்களில் மறுதேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணே இறுதி

இந்நிலையில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களுடன், தற்போது விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, நாளை (ஆக.6) தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

தேர்வின்போது உரிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் மீண்டும் தேர்வு எழுத விருப்பப்பட்டால் அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

2020-2021ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து, மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதி, துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கட்டாயம் அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எழுதவுள்ள துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே 12ஆம் வகுப்புத் தேர்வின் இறுதி மதிப்பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - தகுதியானவர்களை பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details