தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம் - 12th practical exam in Tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் வரும் 23ஆம்தேதி வரை நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.

practical exam
செய்முறைத் தேர்வு

By

Published : Apr 16, 2021, 11:38 AM IST

தமிழ்நாடு முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (ஏப்ரல் 16) தொடங்கியது. கரோனா கட்டுப்பாட்டு வழிமுறையுடன் மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர், சானிடைசர் கொண்டு கைகளைச் சுத்தம் செய்கின்றனர். உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே ஆய்வகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் அரசுத் தேர்வுத் துறை வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்

இன்றுமுதல் வரும் 23ஆம் தேதிவரை நடைபெறும் செய்முறைத் தேர்வை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 8 ஆயிரத்தை நெருங்கிய கரோனா!

ABOUT THE AUTHOR

...view details