தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

+2 தேர்வு முடிவை வேறு தேதியில் மாற்றவும் - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று பன்னிரெண்டாம் தேர்வு முடிவை அன்று வெளியிடாமல் வேறு தேதியில் வெளியிட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By

Published : Apr 15, 2019, 10:38 PM IST

பொன்.இராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகை வர இருப்பதால் தேர்வு முடிவை அன்று வெளியிடாமல் வேறு தேதியில் வெளியிடவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிட இருப்பதை அரசு அறிவிப்பின் மூலம் தெரியவந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

இந்த ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான ஒரு பண்டிகையாகும். அந்த நேரத்தில் தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ மக்கள் பங்கு கொள்வார்கள். இதனைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் அறிவிக்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details