சென்னை:இயக்குநர் ஷரன் குமார் இயக்கத்தில், நடிகர் பரத் நடித்த 'நடுவன்' திரைப்படம் 12ஆவது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-க்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷரன் குமார் கூறுகையில், '12ஆவது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-க்கு எங்கள் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டு, எங்கள் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் படத்தினை தேர்வு செய்த ஜூரி மெம்பர்களுக்கு நன்றி.
எங்கள் திரைப்படம் வெளியான போதிலிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. உலகத் திரைப்பட திருவிழாவான சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா சர்வதேச திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு பெற்றது. புதுச்சேரி போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் உலகெங்கிலும் எங்கள் படம் விருதுகளை வென்றுள்ளது.