சென்னை:தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மே 10ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து கோடை விடுமுறை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை முதல் 12ஆம் வகுப்புகள் தொடக்கம்
தமிழ்நாடு பாடத் திட்டத்தில் 2022-2023ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படிக்கவுள்ள மாணவர்களுக்கு நாளை (ஜூன் 20) வகுப்புகள் தொடங்கவுள்ளன.
நாளை முதல் 12 ஆம் வகுப்புகள் தொடக்கம்
இந்தநிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை (ஜூன் 20) முதல் தொடங்கவுள்ளன. இதைத் தொடர்ந்து 11ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியான பின்னர், 11ஆம் வகுப்பில் மாணவர்கள் நாளை மறுநாள் முதல் சேர்க்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:பி.இ. மாணவர் சேர்க்கை: நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்