தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 ம் வகுப்பு துணைத் தேர்வு; நாளை முதல் ஹால் டிக்கெட் - நாளை முதல் ஹால்டிக்கெட்

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

12 ம் வகுப்பு துணைத் தேர்வு; நாளை முதல் ஹால்டிக்கெட்
12 ம் வகுப்பு துணைத் தேர்வு; நாளை முதல் ஹால்டிக்கெட்

By

Published : Jul 19, 2022, 4:37 PM IST

சென்னை:12 ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25 ந் தேதி முதல் ஆகஸ்ட் 1 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது ஹால்டிக்கெட்டை 20 ந் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.

12 ம் வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

ABOUT THE AUTHOR

...view details