பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இன்று (மே.23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையேற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை இக்கூட்டத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தொழில்முறைக் கல்விக்கான நுழைவுத்தேர்வுகள், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவு!