சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் இன்றைய முடிவுகளை, பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 74 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 1,289 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதுவரை 4 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரத்து 559 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 26 லட்சத்து 80 ஆயிரத்து 857 நபர்கள் தொற்று பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.
18 பேர் உயிரிழப்பு
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த ஆயிரத்து 421 பேர் நலமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 29 ஆயிரத்து 201 என உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று (அக்.12) தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 814 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,51,951
கோயம்புத்தூர் - 2,44,271
செங்கல்பட்டு - 1,70,019
திருவள்ளூர் - 1,18,488
ஈரோடு - 1,02,878
சேலம் - 98,767
திருப்பூர் - 93,988
திருச்சிராப்பள்ளி - 76,681
மதுரை - 74,884
காஞ்சிபுரம் - 74,348
தஞ்சாவூர் - 74,368
கடலூர் - 63,717
கன்னியாகுமரி - 62,050
தூத்துக்குடி - 56,050
திருவண்ணாமலை - 54,605
நாமக்கல் - 51,289
வேலூர் - 49,585