புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 915 நபர்கள், காரைக்காலில் 222 நபர்கள், மாஹேவில் 25 நபர்கள், ஏனாமில் 75 நபர்கள் என மொத்தம் ஆயிரத்து 237 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் 1,237 பேருக்கு கரோனா - கரோனா விதிமுறைகள்
புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 237 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 23 நபர்கள், காரைக்காலில் மூன்று நபர்கள் என 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 408ஆக உயர்ந்துள்ளது. இன்று (மே.25) ஒரே நாளில் சிகிச்சைப் பெற்று ஆயிரத்து 571 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
15 ஆயிரத்து 475 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 81 ஆயிரத்து 336 நபர்கள் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு 98 ஆயிரத்து 219ஆக உள்ளது. நேற்று (மே.24) ஒரேநாளில் இரண்டாயிரத்து 751 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 940 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.