சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (12). இவர் அதே பகுதி நெல்லிக்காரன் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 6) மாலை வீட்டின் மூன்றாவது மாடியில் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு - child deadth
சென்னை: திருவொற்றியூரில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) சிகிச்சைப் பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி - 4 மணி நேரத்தில் பிடிபட்ட கொள்ளையர்