ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் குறித்தும் நெகிழிப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சென்னை மாநகராட்சியால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மேலும், தடையை மீறி நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவோரை கண்டறிய பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூர், மணலி ஆகிய மண்டலங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள், உணவங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இன்று திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.