சென்னை:சென்னை தலைமைச்செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET Corporation) சார்பில் தமிழ்நாட்டில் பாரத் நெட் இரண்டாம் கட்ட திட்டம் (Bharat Net Phase-II) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று(மார்ச் 30) கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "இன்றைய தினம் ஐடி துறையின் மைல் கல்லாகப் பார்க்கிறோம். பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே பாரத் நெட் மூலம் 2 பேக்கேஜ் ரோல் அவுட் (Roll out ) செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் :இன்று 509 கோடி ரூபாய் மதிப்பில் 1 பேக்கேஜ் ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது. விரைவில் 4ஆவது பேக்கேஜ் ரோல் அவுட் பணிகள் செய்யப்படும். இன்று ரோல் அவுட் செய்யப்பட்ட பேக்கேஜ் மூலம் ஓர் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சி, கிராமங்களில் பணிகள் முடிவுக்கு வரும். இதனால் 12 ஆயிரத்து 525 கிராமங்களுக்கு இணைய வசதிகள் கிடைக்கும்.