ஆவடி அடுத்த பங்காருபேட்டை பாலாஜி நகரை சேர்ந்தவர் செய்யது இஸ்மாயில் (51). இவர் இரும்பு கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பேகம், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆசிரியர் வீட்டில் 12 சவரன் தங்க நகை கொள்ளை - ஆசிரியர் வீட்டில் கொள்ளை
சென்னை: ஆவடி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 சவரன் தங்க நகை கொள்ளை
வழக்கம் போல் காலையில் இந்த தம்பதியினர் இருவரும் வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 சவரன் தங்க நகை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து இஸ்மாயில் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.