தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூதாட்டத்தில் ஈடுபட்ட12 பேர் கைது: ரூ.35 ஆயிரம் பறிமுதல்! - சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட12 பேர் கைது

சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் குடியிப்பு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட12 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட12 பேர் கைது

By

Published : Dec 28, 2020, 7:04 PM IST

சென்னை அடுத்த பெருங்களத்தூரில் குடியிப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேற்றிரவு (டிச.27) சென்ற காவல் துறையினர், அங்கு தீடிர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வீட்டை வாடகை எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூர்த்தி, வெங்கடேஷ், அருள்ஜோதி உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 35 ஆயிரம் ரூபாய் பணம், சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்து, பீர்க்கன்காரணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய வாடகை எடுத்து சூதாட்டம் நடத்திவந்த முக்கிய நபரான பீர்க்கன்காரணையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details