தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Union Minister S Jaishankar

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

12 இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
12 இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

By

Published : Jul 4, 2022, 4:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் நேற்று (ஜூலை 3) கைது செய்யப்பட்டனர். எனவே, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு, தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழ்நாடு மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் - சசிகலா

ABOUT THE AUTHOR

...view details