காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 12 மணி நேரத்திற்கு மேல் மின்தடை நீடித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சூரியநாராயண சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தற்போது கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல்காற்று வீசுவதால், வீட்டினுள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
12 மணிநேர மின்தடை - ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியல் - மின்தடை
சென்னை: 12 மணிநேரத்துக்கு மேல் மின்தடை நீடித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். நேற்று காலையில் ஏற்பட்ட மின்தடை, இரவு நேரம் ஆனபோதும் சரிசெய்யப்படாமல் நீடித்ததால், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளிகள், தேர்வு நேரத்தில் படிக்க முடியாமல் அவதியுற்ற பள்ளி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சூரியநாராயண சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு காவல் துறையினர், மின்வாரிய தொழிலாளர்களுடன் பேசி மின் இணைப்பு வழங்கும்படி வற்புறுத்தியதையடுத்து மக்கள் கலைந்துசென்றனர்.