தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரெவி புயல் முன்னெச்சரிக்கை: 12 விமானங்கள் ரத்து - chennai flight cancelled

சென்னை: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (டிச. 03) 12 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

விமானங்கள் ரத்து
விமானங்கள் ரத்து

By

Published : Dec 3, 2020, 9:49 AM IST

புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக இன்று (டிச. 03) சென்னையிலிருந்து, தூத்துக்குடிக்குச் செல்லவிருந்த மூன்று விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதேபோல் தூத்துக்குடியிலிருந்து, சென்னை வரவேண்டிய மூன்று விமானங்கள் என்று மொத்தம் ஆறு விமானங்கள் இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அத்தோடு சென்னையிலிருந்து, திருச்சி செல்லும் இரண்டு விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னை வரும் இரண்டு விமானங்கள் என மொத்தம் நான்கு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னையிலிருந்து, கொச்சி செல்லும் 1 விமானமும், கொச்சியிலிருந்து சென்னை வரும் 1 விமானமும் ரத்தாகி உள்ளன. புரெவி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச.03) ஒரேநாளில் 12 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புரெவி புயல்: பாம்பனில் 60 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக்காற்றால் பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details