சென்னை: இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில், வணிக வரித்துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில், இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் உத்திரவிற்கிணங்க, வணிக வரித்துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.