சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "11ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இந்தத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நவம்பர் 11,12ஆகியத் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.