கடந்த மார்ச் மாதத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றதை அடுத்து கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
பின்னர், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் ஜுலை 31ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் 12ஆம் தேதிவரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், 12 ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் 7ஆம் தேதிவரை விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் இதற்காக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.