கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்டு எப்போது தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன.
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள்
19:26 June 08
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் 11ஆம் வகுப்பில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் 10 முதல் 15 விழுக்காடு கூடுதல் மாணவர்களை சேர்க்கலாம். குறிப்பிட்ட அளவை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம்.
அதிக விண்ணப்பங்களைப் பெறும் பாடப்பிரிவிற்கு தொடர்புடைய பாடங்களில் 50 வினாக்கள் அடங்கிய தேர்வு நடத்தலாம். 11ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 3ஆம் வாரத்திலிருந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகள் தொடங்கலாம். 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம், தொலைத்தொடர்பு முறையில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.
இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.