தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் - 90.07 % தேர்ச்சி - அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 90.07 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டது.

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

By

Published : Jun 27, 2022, 10:20 AM IST

Updated : Jun 27, 2022, 11:06 AM IST

சென்னை:பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 10 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7535 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனையடுத்து, பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூன்.27) வெளியானது. மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேரில், 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.0 7 சதவீதமாக உள்ளது.

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.99 சதவீதம். இதேபோல் மாணவர்கள் மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 243 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களின் தேர்ச்சி விகிதம் 84.86 சதவீதமாக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் ஒரு மாணவர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: தேர்வில் தோல்வியடைந்த பலர் நீதிபதிகளாக உள்ளனர் - டிஜிபி சைலேந்திரபாபு நம்பிக்கை பேச்சு!

Last Updated : Jun 27, 2022, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details