பதினொராம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் மாதம் 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடந்தது. இத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 278 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ மாணவிகள் மற்றும் 5 ஆயிரத்து 32 தனித் தேர்வர்களும் எழுதினர்.
நாளை வெளியாகிறது 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! - பொதுத்தேர்வு
சென்னை: பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அரசு தேர்வுகள் துறை இயக்ககத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுகள் துறை இயக்கத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலமும் தெரியப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.