சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் மேலும் 1,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை டிசம்பர் 15ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், "சென்னையில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதற்கு மேலும் ஒரு தனியார் ஆய்வகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 65 ஆயிரத்து 810 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1130 நபர்கள், டெல்லி, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவர் என 1132 நபர்களுக்கு வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 27 லட்சத்து 89 ஆயிரத்து 482 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 8 லட்சத்து ஆயிரத்து 161 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 9,951 நபர்கள் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 291ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 நோயாளிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 4 நோயாளிகள் என 10 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,919ஐ எட்டியுள்ளது.
மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை- 2,20,560
- கோயம்புத்தூர்- 50,677
- செங்கல்பட்டு-48,855
- திருவள்ளூர் -41,885
- சேலம்-30,866
- காஞ்சிபுரம்- 28,218
- கடலூர் -24,454
- மதுரை - 20,164
- வேலூர் - 19,851
- திருவண்ணாமலை - 18,938
- தேனி - 16,746
- தஞ்சாவூர் -16,770
- விருதுநகர் -16,148
- கன்னியாகுமரி -16,054
- தூத்துக்குடி - 15,896
- ராணிப்பேட்டை - 15,778
- திருப்பூர் - 16,322
- திருநெல்வேலி - 15,075
- விழுப்புரம் -14,807
- திருச்சிராப்பள்ளி -13,775
- ஈரோடு -13,127
- புதுக்கோட்டை -11,285
- கள்ளக்குறிச்சி -10,737
- திருவாரூர் - 10,705
- நாமக்கல்-10,839
- திண்டுக்கல் - 10,642
- தென்காசி -8,172
- நாகப்பட்டினம் - 7,897
- நீலகிரி-7,698
- கிருஷ்ணகிரி - 7,672
- திருப்பத்தூர் -7,353
- சிவகங்கை -6,427
- ராமநாதபுரம் -6,267
- தருமபுரி -6,261
- கரூர் -5,004
- அரியலூர் - 4,613
- பெரம்பலூர் - 2,251
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 928
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -1,016
- ரயில் மூலம் வந்தவர்கள் -428
இதையும் படிங்க:ஐஐடி கரோனா பரவல் ஒரு பாடம்!