டெல்லி மாநாட்டில் மார்ச் முதல் வாரம் ஜமாத் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து பலர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் பல வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கரோனா வைரஸ்! - தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு
18:08 April 01
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து இதில் பங்கேற்ற தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு பேர் நேற்றைய முன்தினம் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 50 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் 40 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது என்றும் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...டெல்லி சென்ற எட்டு பேரில் நால்வருக்கு கரோனா அறிகுறி!