தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனின் நண்பர் - உடந்தையாக இருந்த அண்ணன் தலைமறைவு - சென்னையில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனின் நண்பர்

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனின் நண்பர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அண்ணன் ஆகியோர் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Sexual Assault on school Boy
Sexual Assault on school Boy

By

Published : Dec 19, 2021, 7:46 PM IST

சென்னை: ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு, அவருடைய அண்ணனின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்ற போது, அவரைத் தடுத்து நிறுத்தி, "என் நண்பன் மீது புகார் கொடுக்கக்கூடாது" எனக் கூறி சிறுவனின் அண்ணன் அடித்து மிரட்டி உள்ளார்.

தம்பிக்கு கெடுதல் நினைத்த அண்ணன்

அதன்பின் சிறுவனின் தாயார் புகார் அளிக்க, திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனின் நண்பர், அவருக்கு உடந்தையாக இருந்த சிறுவனின் அண்ணன் ஆகியோர் மீது போக்சோ உள்பட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ், கைது செய்ய காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக - எஸ்டிபிஐ மோதல்: 12 மணிநேரத்தில் 2 கொலை; கேரளாவில் பதற்றம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details