அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் கூட்டாக இன்று (அக்.7) சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.
- திண்டுக்கல் சீனிவாசன் : அதிமுக அமைப்புச் செயலாளர், வனத்துறை அமைச்சர்
- தங்கமணி : அதிமுக அமைப்புச் செயலாலர், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர், மின்சாரத் துறை அமைச்சர்
- எஸ்.பி.வேலுமணி : அதிமுக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்
- ஜெயக்குமார் : அதிமுக அமைப்புச் செயலாளர், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்
- சி.வி.சண்முகம் : விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர், சட்டம், நீதிமன்றங்கள் சிறைத்துறை அமைச்சர்
- காமராஜ் : திருவாரூர் மாவட்ட அதிமுகச் செயலாளர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
- ஜே.சி.டி.பிரபாகர் : அதிமுக அமைப்புச் செயலாளர், அதிமுக செய்தித் தொடர்பாளர்
- மனோஜ் பாண்டியன் : அதிமுக அமைப்புச் செயலாளர்
- முன்னாள் அமைச்சர் பா.மோகன் : அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
- கோபாலகிருஷ்ணன் : அதிமுக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்
- மாணிக்கம் : சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்