சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குரூப் 2ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இவர்களுக்கு வரும் மே மாதம் 21 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு பிப்ரவரி 23 ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் செய்தவர்கள் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.