இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ்-1வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வினை எழுதுவதற்கு மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்), அந்தெந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மே.16 மற்றும் 17 ஆகிய நாட்களில் விண்ணப்பத்தினை சமர்பிக்க வேண்டும்.
பிளஸ்-1 சிறப்பு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - supplementary exam
சென்னை: "பிளஸ்-1 வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் சிறப்புத் துணைத் தேர்வு எழுத மே.16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்" என்று, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்துரா தேவி தெரிவித்துள்ளார்.
11-ம் வகுப்பு தேர்வு
விண்ணப்பத்தோடு மதிப்பெண் பட்டியல் நகல், பொதுத் தேர்வின் போது வருகை தராதவர்களாக இருந்தால் நுழைவுச் சீட்டு நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை பணமாகதான் செலுத்த வேண்டும். இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அறிவுரையின் படி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளும் நாள் பின்னர் அறிவிக்கப்படும், என்று கூறப்பட்டுள்ளது.