தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கியது. தமிழ்,ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த நிலையில் முக்கியப் பாடமான கணக்குத் தேர்வு இன்று நடைபெற்றது.
கணிதம் தேர்வு முடிவடைந்த நிலையில் வினாத்தாள் குறித்து தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது,
கணக்கு வினாத்தாளை பார்த்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது. 2 மதிப்பெண், 5 மதிப்பெண், 10 மதிப்பெண் என அனைத்துப் பிரிவுகளிலும் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் முற்றிலும் புதிதாக இருந்ததது என மன வருத்தத்துடன் தெரிவித்தனர். கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை விட கணக்கில்தான் 100 க்கு 100 மதிப்பெண்கள் எளிதாக பெற முடியும். ஆனால் இந்த வினாத்தாளில் 75 க்கும் மேல் பெறுவதே சிரமம்தான் என்றனர்.