தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குளறுபடி: ஆசிரியர்களிடம் விசாரணை - 10th Board Results 2020

சென்னை: பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தயாரித்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களிடம் விசாரணை
ஆசிரியர்களிடம் விசாரணை

By

Published : Aug 12, 2020, 3:25 PM IST

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், அரசு தேர்வுத்துறை புள்ளி விவரங்களின் அடிப்படையில் 5 ஆயிரத்து 177 மாணவர்களின் விவரம் தவறுதலாக இடம்பெற்றதுடன், இந்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையச் செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், 4 ஆயிரத்து 359 மாணவர்கள் ஆண்டு முழுவதும் பள்ளிக்கு வரவில்லை என்றும், 231 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 658 மாணவர்கள் இடைநின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கும் விதமாக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பள்ளிகளிலேயே தயாரித்ததே குழப்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது இவ்விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த விவகாரத்தில் கவனக் குறைவாகச் செயல்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பில் 5,248 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததற்கு காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details