கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர மாநிலம் முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதுமட்டுமில்லாமல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இச்சூழலில் கடந்த வாரம் இந்தப் பொதுத்தேர்வு ஜூன் 1ஆம் தேதியில் தொடங்கி ஜூன் 12ஆம் தேதியில் முடியும் என அரசு அறிவித்தது.
'தேதியில் மாற்றங்களே இல்லை; 10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்'
சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி, அதே தேதியில் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த முடிவை எதிர்த்து, தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், தேர்வினை நடத்தும் முறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே பொதுத்தேர்வை அரசு ஒத்திவைக்கும் என்ற தகவல் வெளியாகியது. தற்போது இத்தகவலை மறுக்கும் விதமாக, அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனக் கூறியுள்ளார். தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், முதலமைச்சரின் ஒப்புதலோடு ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையில் உள்ள தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும்! - ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்!