தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதிப்பெண் சான்றிதழ் விநியோகத்தை பார்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - employment registration

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்று இன்று (அக்டோபர் 23) முதல் பள்ளிகளில் விநியோகிக்கப்படுவதையொட்டி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, வேலை வாய்ப்பு பதிவு நடைமுறையை பார்வையிட்டார்.

10th grade students mark sheet issued today
10th grade students mark sheet issued today

By

Published : Oct 23, 2020, 2:53 PM IST

சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு அலுவலக பதிவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை இன்று (அக்.23) காலை 10 மணி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வர வைக்கப்பட்டு கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர்.

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து வேலை வாய்ப்புத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்வதையும் பார்வையிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details