தமிழ்நாடு

tamil nadu

கல்குவாரி நீரில் மூழ்கி மாணவர் பலி

By

Published : Jan 13, 2021, 5:33 PM IST

சென்னை: நங்கநல்லூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவர் கல்குவாரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

10th class student, drowned in Nanganallur
10th class student, drowned in Nanganallur

சென்னை பழவந்தாங்கல் அடுத்த உள்ளகரம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ். இவருடைய மகன் மோகன் குமார்(15). இவர் நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நங்கநல்லூரில் உள்ள பக்தவச்சலம் நகரில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்காக அவரும் அவரது நண்பரும் சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மோகன்குமார் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது நண்பர் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் மோகன் குமாரை தேடியுள்ளனர். அவர்களால் கண்டறிய முடியாததால், தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்

தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வாகனத்துடன் வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் தேடியும் கிடைக்காததால் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன்பிறகு இன்று காலை வேளச்சேரியில் இருக்கும் தீயணைப்பு துறையினர் கல்குவாரிக்கு சென்று மோகன் குமாரை சடலமாக மீட்டனர்.

பின்னர் மோகன்குமாரின் சடலத்தை உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details