தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக அரசு அட்டவணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு மையங்கள் தயார் செய்வதற்கானப் பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் 10ஆம் வகுப்புத் தேர்வு தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் இருப்பின் மிஸ்டு கால் கொடுத்து, விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் எனக் கேள்வி எழுந்துள்ளது. மேலும் தேர்வுகளை தள்ளிவைக்குமாறும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்தச் சூழலில் கரோனா அச்சம் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களைப் போக்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நூதன முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் அழைக்க பள்ளிக்கல்வித்துறை எண் அறிவிப்பு ஆகவே, மாணவர்கள் 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, 10ஆம் வகுப்புத் தேர்வு குறித்த விளக்கம் பெறலாம். அவ்வாறு அழைக்கும்போது கரோனா அச்சமின்றி எவ்வாறு தேர்வு எழுதுவது என்பது குறித்து ஆடியோ ஒலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்குக்குப் பின் செமஸ்டர் தேர்வுகள் - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை!