தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிமாநிலத் தமிழ் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்- வைகோ - வெளி மாநில மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவேண்டும்

சென்னை: மாநிலத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைப்போல தமிழ்வழி கல்வி பயிலும் வெளி மாநில மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

10th class exam outstation students also to declare pass vaiko
10th class exam outstation students also to declare pass vaiko

By

Published : Jun 28, 2020, 3:06 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாடத்திட்டத்தின் படி வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி நிலை குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.

இதனால் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், தமிழக கல்வி முறையில் பயிலும் 190 மாணவர்கள் தங்கள் தேர்ச்சி நிலை குறித்து தெளிவான உத்தரவுகள் கிடைக்காததால் கவலை கொண்டுள்ளனர்.

இதுகுறித்த தகவலை மும்பை தமிழ் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

தமிழ்நாடு அரசு 2019-20 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் பயின்ற தமிழக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததைப் போல், தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மும்பை மாணவர்கள் 190 பேர் உள்பட, வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை விரைவில் வெளியிடவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details