தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாட வாரியாக தேர்வு அட்டவணை! - சென்னை

Subject wise SSLC and HSC public exam schedule: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதற்கான பாட வாரியாக தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 2:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2023 - 2024ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி இன்று (நவ.16) காலையில் வெளியிட்டார். தற்போது பாட வாரியாக பொதுத்தேர்வின் கால அட்டவணை வெளியாகியுள்ளது.

12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை:-

வ.எண் தேதி பாடம்
1. மார்ச் 1 மொழிப்பாடம்
2. மார்ச் 5 ஆங்கிலம்
3. மார்ச் 8 தொடர்பு ஆங்கிலம் இந்திய கலச்சாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி) அடிப்படை மிண்ணணு பொறியியல்
4.

மார்ச் 11

வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல்
5. மார்ச் 15 இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள்
6.

மார்ச் 19

கணக்கு, விலங்கியல், வணிகவியல்,நுண்ணுரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது)
7.

மார்ச் 22

உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடத்தப்படும். பொதுத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர் மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும்.

11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை:-

வ.எண் தேதி பாடம்
1. மார்ச் 4 மொழிப்பாடம்
2. மார்ச் 7 ஆங்கிலம்
3. மார்ச் 12 இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள்
4.

மார்ச் 14

ஆங்கிலம் இந்திய கலச்சாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி) அடிப்படை மிண்ணணு பொறியியல் 5. மார்ச் 18 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் 6. மார்ச் 21 வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல் 7.

மார்ச் 25

கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது)

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு 2024 மார்ச் 4ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25ஆம் தேதி வரை நடத்தப்படும். பின்னர் மே 14ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

10 ஆம் வகுப்பு கால அட்டவணை:-

வ.எண் தேதி பாடம்
1. மார்ச் 26

தமிழ் மற்றும்

இதர மொழிப்பாடங்கள்

2. மார்ச் 28 ஆங்கிலம்
3. ஏப்ரல் 1 கணக்கு
4. ஏப்ரல் 4 அறிவியல்
5. ஏப்ரல் 6 விருப்பப்பாடம்
6. ஏப்ரல் 8 சமூக அறிவியல்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 2024 பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடத்தப்படும். மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 மே 10ஆம் தேதியில் வெளியிடப்படும்.

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details