தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10, 11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - tamil latest news

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதிக்கு முன்னர் செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Jan 30, 2023, 1:14 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி

சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை நடத்துவது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அரசு தேர்வுத் துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்வின் போது எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளும் வழங்கி உள்ளது.

அதன்படி சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, பொதுத் தேர்வினை சிறப்பாக நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு உரிய நேரத்திற்குத் தேர்வு மையங்களுக்குச் செல்லும் வழித்தடங்களை முறையாக ஏற்படுத்தித் தர வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்படும். பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியிடப்படும்.

10 11 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏற்கனவே மார்ச் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 15 முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். செய்முறை தேர்விற்கும் பொது தேர்விற்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த முறை நடந்த ஒரு சில தவறுகள் கூட இந்த முறை நடைபெறக்கூடாது. நல்ல தேர்ச்சி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை தேர்வு எழுத விண்ணப்பம் செய்யாத தனித்தேர்வர்கள் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பாக பணியாற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். மாணவர்கள் பொதுத் தேர்வு எந்தவித அச்சமும் இன்றி எழுதுவதற்காகத் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வினாத்தாள் பெற்று மீண்டும் அச்சிடப்பட்டு, விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு பிப்.1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ABOUT THE AUTHOR

...view details