தமிழ்நாட்டில் மேலும் 106 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு! - தமிழ்நாட்டில் மேலும் 106 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு
09:07 April 13
17:39 April 12
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 106 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் வீட்டு கண்காணிப்பில் 39 ஆயிரத்து 41 பேர் இருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நேரடி கண்காணிப்பிலும் 162 பேர் உள்ளனர். இதில் 58 ஆயிரத்து 189 பேர், 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 10 ஆயிரத்து 655 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று மேலும் 106 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்ததுள்ளது. மேலும், இன்று தமிழ்நாட்டில் ஒருவர் கரோனா வைரஸ் தொற்று பாதித்து உயிரிழந்ததையடுத்து, தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது” என்றார்.
மேலும், “இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசிடம் போதுமான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. தற்போது 14 அரசு கரோனா பரிசோதனை ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரணப் பொருள்கள் வழங்கத் தடை