தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகையில் தமிழ்நாடு முழுவதும் 106 தீ விபத்துகள்! - fire accidents happened in tamilnadu on diwali day

சென்னை: தீபாவளி பண்டிகையன்று தமிழ்நாடு முழுவதும் 106 தீ விபத்துகள் நேரிட்டதாக தமிழ்நாடு தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Nov 15, 2020, 2:50 PM IST

நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 14) தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதற்கிடையில் கவனக்குறைவால் சில விபத்துகளும் நேரிட்டன. தீபாவளி அன்று தமிழ்நாட்டில் எத்தனை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.

”தமிழ்நாடு முழுவதும் 106 தீ விபத்துகள் நேரிட்டன. இதில் ராக்கெட் வெடியை வெடித்ததால் 84 தீ விபத்துகளும், மற்ற பட்டாசுகளால் 22 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதில் சென்னையில் ராக்கெட் வெடியால் 33 விபத்துகள், பட்டாசு வெடித்ததால் 7 விபத்துகள் என 40 விபத்துகள் ஏற்பட்டுள்ளன” என தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று (நவ.14) தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 57 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இந்த விபத்துகளில் 90 விழுக்காடு இரவு 7 மணியிலிருந்து 10 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளியன்று நேர்ந்த விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details