சென்னை:சென்னை விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்கப் பிரிவுக்கு, விமானத்தில் வந்த பாா்சல்களை சுங்கத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, நெதர்லாந்து நாட்டில் இருந்து, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள முகவரிக்கு ஒரு பாா்சலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து நாகர்கோவிலில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்திருந்தன. அந்த பார்சலில் வாழ்த்து அட்டைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தன.
அக்குறிப்பிட்ட பார்சல்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அலுவலர்கள் அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் வெளிநாட்டிலிருந்து போதை மாத்திரைகள் கடத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.