சென்னை: பெசன்ட் நகரில் பிரம்மகுமாரிகள் சமாஜம் மற்றும் ரேலா மருத்துவமனை ஊழியர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர் சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
2013-21 வரை 799 டன் போதை பொருள் பறிமுதல்:1987ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி முதல் உலக புகையிலை விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் , தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி போதைப் பொருட்களான குட்கா, பான்பராக், பான்மசாலா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் 2013ம் ஆண்டு மே 23ஆம் தேதி தொடங்கி கடந்த ஆண்டு மே 23 வரை ஒன்பது ஆண்டுகளில் 799.81 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.