சீனாவில் உருவான கரோனா வைரஸ், தற்போது உலகில் பல்வேறு நாடுகளை ஆட்கொண்டுள்ளது. இந்தத் தொற்றால், இந்தியாவிலும் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
தமிழ்நாட்டில் மேலும் 102 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று - அமைச்சர் வெளியிட்ட ட்வீட்டில் தகவல்! - 102 new cases of Corona positive in TamilNadu
16:36 April 03
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 102 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்வீட் செய்துள்ளார். அதில் “தமிழ்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 23 ஆயிரத்து 689 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 3 ஆயிரத்து 684 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 789 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை. மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட 7 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 484 பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என அந்த ட்விட்டரில் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...இருக்கையில் அமரவைத்து நிவாரணம் வழங்கும் நியாவிலைக் கடை.