சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்காக, கிருமி நாசினி இயந்திர பயன்பாட்டை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர், காவலர்களுக்கு கபசுரக் குடிநீர், கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கினார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர், "சென்னை காவல்துறைக்காக கிருமி நாசினிகளை தொடாமல் கைகழுவுமாறு வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தை சட்டக் கல்லூரி மாணவர் நிகுல் ஆனந்த், எம்.ஒ.பி வைஷ்ணவா கல்லூரி ரக்ஷனா சுரேஷ் பிரபு ஆகியோர் தங்களின் சொந்தச் செலவில் வாங்கிக் கொடுத்துள்ளனர்.