இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக இயக்குனர் கூறியுள்ளதாவது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா தளங்களுக்கு படையெடுப்பது வழக்கம்.
கோடை விடுமுறையை ஒட்டி 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - 100 special buses
சென்னை: பொதுமக்கள் கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்களுக்கு சிரமம் இன்றி பயணம் செய்ய மாநகர் முழுவதும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநகர போக்குவரத்து கழக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
![கோடை விடுமுறையை ஒட்டி 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3055264-thumbnail-3x2-bus.jpg)
மாநக போக்குவரத்து
அப்படி பயணம் செய்வோர்கள் சுற்றுலா தளங்களுக்கு சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக மாநகர் முழுவதும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் எளிதில் அவர்கள் தாங்கள் செல்ல நினைக்கும் சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.