சென்னை:மருத்துவர்கள் தின விழாவில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு தடுப்பூசி வழங்கியதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பாராட்டி விருது வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 21,800 பழங்குடியினர் தகுதிவாய்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஜுன் 29 ஆம் தேதியோடு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டு விட்டது. இதன் மூலம், நாட்டிலேயே பழங்குடியினர்கள் 100 விழுக்காடு தடுப்பூசி எடுத்துக் கொண்ட மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது.
இந்நிலையில், விழா முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "பழங்குடியின மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து பரவிய தவறான தகவலை களைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அச்சத்தை நீக்கினோம். பழங்குடியின தலைவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி அவர்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் பழங்குடியின மக்களிடம் தடுப்பூசியினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை விளக்கி கூறினார்கள். அதன் பின்னர் தடுப்பூசி செலுத்தினோம்,