சென்னை:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்" என்று அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்றுநரைக் கொண்டு மாவட்ட அளவில் சதுரங்க விளையாட்டில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டின் நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று விளையாடி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும், சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 1 - 5 வகுப்புகள், 6 - 8 வகுப்புகள், 9 -10 வகுப்புகள், 11 - 12 வகுப்புகள் என 4 பிரிவுகளாக நடைபெற்றன.