சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் மட்டும் குறைவதாக இல்லை. நேற்று தமிழ்நாட்டில் 121 பேர் கரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. அதில், சென்னையில் தான் அதிகபட்சமாக 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673ஆக உள்ளது.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
தண்டையார்பேட்டை - 70 பேர்,
திரு.வி.க. நகர் - 128 பேர்,
தேனாம்பேட்டை - 81 பேர்,
திருவொற்றியூர் - 15 பேர்,
அடையார் - 19 பேர்,
பெருங்குடி - 9 பேர்,
ஆலந்தூர் - 9 பேர்,