இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 3ஆம் தேதி தேர்வுத்துறை சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - அரசு தேர்வுத்துறை
சென்னை: பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மத்திய அரசின் புதிய கல்வி உதவித்தொகை பெறலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்வினை எழுதுவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 22.8.2019 முதல் 7.9.2019 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ரூ.50 உடன் சேர்த்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 7.9.2019 ஆகும். இந்த காலக்கெடு மீண்டும் நீடிக்கப்படாது. மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விபரங்களை அறியலாம் என அதில் கூறியுள்ளார்.